புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஒன்றிய அரசுக்கு 7 கோரிக்கைகளை முன் வைத்து ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை: நமது நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் ஒன்றிய அரசுகளால் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே நடுத்தர மக்களை கவனத்தில் கொண்டு 7 அம்ச திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
* கல்விக்கான பட்ஜெட்டை தற்போதைய 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்
* தனியார் பள்ளி கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான மானியங்கள், உதவித்தொகைகள் மற்றும் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
* சுகாதாரக் காப்பீட்டு பிரீமியத்தின் மீதான வரிகளை நீக்குவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.
* நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக நிதிச்சுமையைக் காரணம் காட்டி, வருமான வரி விலக்கு வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.
* அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை அகற்ற வேண்டும்.
* தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
The post அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் வருவானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக்க வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை appeared first on Dinakaran.