புதுடெல்லி: உபி மாநிலம் பண்டாவைச் சேர்ந்தவர் ஷபீர்கான். இவரது மகள் ஷாஜாதி (33). கடந்த 2021ல் அபிதாபிக்கு பணிப்பெண்ணாக சென்றவர் தனது முதலாளியின் குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்கில் ஷாஜாதிக்கு கடந்த 2023ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அபுதாபி அல் வத்பா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடைசியாக கடந்த மாதம் 14ம் தேதி குடும்பத்தினருடன் பேசி உள்ளார். அதன்பின் அவரது நிலை குறித்து குடும்பத்தினரால் அறிய முடியவில்லை. தனது மகளின் நிலை குறித்து தெரியப்படுத்தக் கோரி ஷபீர்கான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 15ம் தேதியே ஷாஜாதியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் உறுதிபடுத்தப்பட்டது. நாளை (மார்ச் 5) இறுதி சடங்கு நடத்தவும் அதில் குடும்பத்தினர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஷாஜாதியின் முதலாளிக்கு கடந்த 2022 ஆகஸ்டில் குழந்தை பிறந்துள்ளது. 2022 டிசம்பர் 7ம் தேதி குழந்தைக்கு வழக்கமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை குழந்தை இறந்துள்ளது. ஆனால், குழந்தையை ஷாஜாதி கொன்றதாக தூக்கிலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post அபுதாபியில் மரண தண்டனை மகள் தூக்கலிடப்பட்ட தகவலை நீதிமன்றம் மூலம் அறிந்த தந்தை: 16 நாட்களுக்கு பின் சோக செய்தி appeared first on Dinakaran.