டெல்லி: அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது என்று ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு பகிரங்க ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு பகிரங்க ஒப்புதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனு அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. புலனாய்வு அமைப்புடன் ஆலோசிக்காமலேயே அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.ராஜு தகவல் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அபய் எஸ்.ஓகா, வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
அமலாக்கத்துறையே பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதால் வழக்கறிஞரை குறைகூற முடியாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். பதில் மனுவில் ஏற்பட்ட குளறுபடிக்கு துறைரீதியான விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளேன். கோளாறான பதில் மனுவை தாக்கல் செய்த அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளேன் என்றும் ராஜு கூறினார்.
The post அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது என்று ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு பகிரங்க ஒப்புதல் appeared first on Dinakaran.