புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கையில் பூதக்கண்ணாடியுடன் வந்திருந்த அவர், ‘‘அமெரிக்க டாலாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வாறு வீழ்ச்சி அடைகிறது என்பதை அறிய தவறியதால் இந்த கண்ணாடியை கொண்டு வந்துள்ளேன். ரூபாயின் வீழ்ச்சியுடன் பிரதமரின் கண்ணியமும், அவரது அலுவலகத்தின் நேர்த்தியும் வீழ்ச்சியடைகின்றது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87ஆக உள்ளது.
அதே நேரத்தில் மோடி பிரதமரானபோது ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.58ஆக இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் 50சதவீதம் சரிவாகும். ரூபாய் இன்று 87 ஆக இருக்கின்றது. பிரதமர் மோடி பின்னால் இருந்து கோஷங்களை எழுப்புகிறார். இந்த முறை இலக்கு 60, 65, 70, 75, 80, 85 என்று முழக்கமிடுகின்றார். இப்போது நாமும் 87ஐ பார்ப்போம். பிரதமர் மோடி இது 100 ரூபாயை எட்டுவதை உறுதி செய்வதாக முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது ” என்றார்.
The post அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை 100 ஆக மாற்ற பிரதமர் முடிவு: காங். கட்சி விமர்சனம் appeared first on Dinakaran.