அமெரிக்கா:அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இன்று வெளியாகி உள்ளது. 1963 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி டல்லாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் பயணித்த போது துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கென்னடி படுகொலை தொடர்பாக லீ ஹார்வி ஓஸ்வால் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கென்னடி ஏன் படுகொலை செய்யப்பட்டார்.
என்ற கேள்விக்கு இதுவரை பதில் வெளிவராத சூழலில் தற்போது இது தொடர்பாக விசாரணை ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று வெளியிடப்பட்ட ஆவணங்களில் ஏராளமான புதிய தகவல்கள் இருப்பதாகவும் எதையும் நீக்கவோ அல்லது திருத்தவோ இல்லை என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதிபராக பதவியேற்ற பிறகு ஜான் எஃப் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங், சொன்னட்டூ ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிடும் கோப்புகளில் டிரம்ப் முதலில் கையெழுத்திட்டிருந்தார்.
The post அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியீடு..!! appeared first on Dinakaran.