புதுச்சேரி: புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் டீ செலவுக்கு மட்டும் ரூ.28 லட்சத்தை அமைச்சர்கள் செலவிட்டிருப்பதாக தெரிவித்துள்ள பாஜக, ஊழல் மலிந்த என்.ஆர். காங்கிரஸ் அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு உள்ளது. இந்நிலையில், என்.ஆர். காங்கிரசை கண்டித்து முன்னாள் மாநில பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் 4 ஆண்டுகளில் அமைச்சர்களின் டீ செலவு ரூ.28 லட்சம், பூங்கொத்து செலவு ரூ.41 லட்சம், காருக்கு போடப்படும் டீசல் மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகி உள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.