மும்பை: அம்பேத்கர் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்து தொடர்பாக உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்துகள் பாஜவின் ஆணவத்தை காட்டுகிறது. அமித்ஷா கூறிய கருத்துக்களுக்காக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும். அம்பேத்கரின் பெயரை பாஜ அழிக்க முயற்சி செய்கிறது. ஆனால் நடக்காது. அப்படி முயற்சி செய்தால் அந்த கட்சியே அழிந்துவிடும்.
பாஜ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் கருத்துகளுடன் உடன்படுகிறார்களா?. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு இல்லாமல் அம்பேத்கர் பற்றி கருத்து கூற அமித்ஷா துணிந்திருக்க மாட்டார். அல்லது அமித்ஷாவின் மூலமாக ஆர்எஸ்எஸ்தான் இப்படி பேசுகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாஜவின் இந்துத்வா வஞ்சகமானது. பிரித்து ஆட்சி செய்வதே அவர்களது இந்துத்துவாகும்.
The post அம்பேத்கர் பெயரை அழிக்க பாஜ முயற்சிக்கிறது: உத்தவ் தாக்கரே சாடல் appeared first on Dinakaran.