டெல்லி: அரசு வழக்கறிஞர்களையும், பிளீடர்களையும் வாரிசு அடிப்படையிலேயே, அரசியல் சார்ந்த பரிசீலனை அடிப்படையிலேயே கண்டிப்பாக நியமிக்க கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கிரிமினல் மேல் முறையீட்டில் அரசு வழக்கறிஞர் செய்த திருப்தியற்ற வாதத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நேரிட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஜி.பி.பார்த்திவால, ஆர். மகாதேவன் அமர்வு அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி, மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை தகுதியின் அடைப்படையில் தான் நியமனம் செய்ய வேண்டும் என்று அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசியல் பரிந்துரைகள் மூலமாகவோ, வாரிசு அடிப்படையிலோ அரசு வழக்கறிஞர்கள், பிளீடர்களை நியமிக்க கூடாது என்றும், பாரபட்சம், வாரிசு அடிப்படை ஆகிய காரணிகள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு நபர் சட்டத்தில் எவ்வளவு திறமையானவர், அவரது பின்னணி நேர்மை போன்றவற்றை கண்டறிய மாநில அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
The post அரசு வழக்கறிஞர், பிளீடர்களை தகுதியின் அடிப்படையில்தான் நியமிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.