புதுடெல்லி: டெல்லியில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போலி வாக்காளர் அடையாள எண்கள் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு மசோதாக்களை அனுப்புதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்மொழியப்பட்டது. இது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையாக வேறுபாடுகள் எழுந்தது. இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து அவை தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.
The post அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து தன்கர் வெளிநடப்பு appeared first on Dinakaran.