இந்தியா மீதான தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தியது. இதையடுத்து பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா மாவட்டங்களின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் வசிக்கும் 1.25 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டு, பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் வீடுகளுக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், “பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்திய பிறகு அந்த பகுதிகளில் ஆராயப்படாத, அகற்றப்படாத வெடிமருந்துகள் சிதறி கிடப்பதால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறிய கிராமவாசிகள் வீடுகளுக்கு திரும்பி செல்ல அவசரப்பட வேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளனர்.
The post அவசரப்பட்டு வீடு திரும்ப வேண்டாம்: காஷ்மீர் காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.