நாக்பூர்: ஆகாஷ்தீர் வான்பாதுகாப்பு கவசத்தின் மீது சர்வதேச நாடுகளுக்கு விருப்பம் ஏற்படும் என்று டிஆர்டிஓ தலைவர் சமீர் காமத் நம்பிக்கை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்களை தாக்கி அழித்ததில் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்கு வகித்தது.
இந்த நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) தலைவர் சமீர் வி.காமத் இது பற்றி கூறுகையில்,‘‘ ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ,நமது வான் பாதுகாப்பு அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாடு அமைப்பான ஆகாஷ்தீர் கண்ணுக்கு தெரியாத சக்தியாக வெளிப்பட்டது.
எனவே பிற நாடுகளிடமிருந்தும் இதன் மீதான ஆர்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.நாம் மிகவும் குறிப்பிடத்தக்க நிலையை அடைந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. வரும் ஆண்டுகளில், நாம் முற்றிலும் சுயசார்பு நிலை அடைந்து விடுவோம் என்பது உறுதி” என்றார்.
The post ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசம் வெளிநாடுகள் விரும்பும்: டிஆர்டிஓ தலைவர் பேட்டி appeared first on Dinakaran.