புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிப் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகாஷ் பிரைம் ஏவுகணை அமைப்பானது சுமார் 4500 மீட்டர் உயரத்தில் செயல்படும் வகையில் தனிபயனாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘இந்திய ராணுவத்திற்கான ஆகாஷ் ஆயுத அமைப்பின் மேம்படுத்தப்பட்ட மாறுபாடான ஆகாஷ் பிரைம் ஜூலை 16ம் தேதி லடாக்கில் இரண்டு வான்வழி அதிவேக ஆளில்லா இலக்குகளை வெற்றிகரமாக அழித்ததன் மூலமாக இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.