லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டையே அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிக்கும் போது கடைசி நிமிடத்தில் 7 வயது சிறுமி தமது புத்தகத்தை மட்டுமே எடுத்து கொண்டு கண்ணீரோடு வெளியேறிய காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது. “காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது” என கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் உத்திரப் பிரதேச சிறுமி. குடியிருந்த வீட்டையே புல்டோசரால் இடித்து தள்ள வீட்டில் இருந்த தமது பாட புத்தகத்தை மட்டும் நெஞ்சில் அணைத்தபடி ஓடி வருகிறார் 7 வயது சிறுமி.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் அம்பேத்கர் மாவட்டம் அரா என்ற கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக அரசு அதிகாரிகள் புல்டோசர் மூலம் குடிசைகளை இடித்து அகற்றினர். அந்த குடிசையில் வசித்த 7 வயது சிறுமி அனன்யா, கடைசி நிமிடத்தில் வீட்டில் இருந்த புத்தகத்தை மட்டுமே எடுத்து கொண்டு கண்ணீரோடு ஓடிவரும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. கல்வியில் கணக்கில்ல பட்டங்களை பெற்ற அண்ணல் அம்பேத்கர் பெயர் கொண்ட மாவட்டத்தில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கல் நெஞ்சம் கொண்டவரையும் கலங்கடிக்கும் இந்த காட்சியை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், பெண்கள் படிப்பதை ஊக்குவிப்பதாக கூறும் பாஜக அரசு தான், இந்த செயலை செய்து இருப்பதாக சாடியுள்ளார்.
The post ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை இடித்த அதிகாரிகள்: வீடே இடிந்தபோதும் நெஞ்சில் சாய்த்தபடி புத்தகத்துடன் ஓடி வந்த சிறுமி!! appeared first on Dinakaran.