லக்னோ:உத்தரபிரதேச ்அரசுப் பள்ளி ஆசிரியை, அங்கன்வாடி ெபண் ஊழியர் ஆகிய இருவரும் குடுமிச்சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ வைரல் வைரலாகி உள்ளது. அரசுப் பள்ளியில் பெண் ஆசிரியை மற்றும் அங்கன்வாடி ஊழியர் ஆகிய இருவரும் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கடந்த 26ம் தேதியன்று அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியையாக இருந்த பிரீத்தி திவாரிக்கும், அங்கன்வாடி பணியாளர் சந்திரவதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அவர்கள் இருவரும் கீழே விழுந்து ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டனர். சில மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு ஆதரவாக அங்கன்வாடி ஊழியரை உதைத்தனர். இறுதியாக, பள்ளி ஊழியர்கள் இருவரையும் விடுவித்தனர். இதற்கிடையில், இந்த சண்டையில் அங்கன்வாடி பணியாளர் சந்திரவதி பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மறுபுறம், இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வட்டார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆசிரியை பிரீத்தி திவாரி கடந்த காலங்களிலும் சிலருடன் சண்டையிட்டவர் என்பது தெரியவருகிறது. அவரை வேறொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
The post ஆசிரியை, அங்கன்வாடி ஊழியர் குடுமிச்சண்டை: உத்தரபிரதேச வீடியோ வைரல் appeared first on Dinakaran.