புதுடெல்லி: பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எம்பி லல்வி ஆனந்த் கோரியுள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பீகார் ஷியோஹர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லல்வி ஆனந்த், “பிரதமர் மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரின் சிறந்த ஆட்சியில் நாடும், கிழக்கு மாநிலமும் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளன. இவர்களின் ஆட்சியில் “அனைவரின் ஆதரவு, அனைவரின் வளர்ச்சி, அனைவரின் முயற்சி” என்ற தாரக மந்திரத்தின் செயல்பாட்டை முழுமையாக உணர முடிகிறது. எனவே, இருவரின் நல்லாட்சி, சிறந்த வளர்ச்சி பணிகளுக்காக இருவருக்கும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
The post ஆட்சி, வளர்ச்சி பணிகளுக்காக பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஜேடியு எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.