அமராவதி: ஆந்திராவில் காட்டுவழியாக அதிகாலையில் கோயிலுக்குச் சென்ற பக்தர்களை யானைக் கூட்டம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், "செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தலகோணா கோயிலுக்குச் சென்ற 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவை யானைக் கூட்டமொன்று தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர், 3 பேர் காயமைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மற்ற இருவர் ஆபத்தான கட்டத்தைத் கடந்து விட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண், இருவர் ஆண்கள்.