டெல்லி : ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைனில் சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட செயலிகளை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 24 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த 25 பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மீது தெலங்கானா மாநில காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என் கே சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய கோரிய மனு குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
The post ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.