ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல ரவுடிக்களான சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.