புதுடெல்லி: மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா – இங்கிலாந்து நாடுகளிடையேயான பொருளாதாரம், நிதி தொடர்பான அமைச்சர்கள் நிலையிலான 13-வது ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.