டெல்லி: இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய இணையதளம் செல்போன் சங்கம் மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இந்தியாவில் இணையதளம் 2024 என்ற பெயரில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 88.6 கோடியாக அதிகரித்திருப்பதாகவும். இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 90 கோடியை தாண்டும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோரில் 55 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் நகர்ப்புறங்களில் இணையதள பயன்பாட்டாளர்களில் 47 சதவீதம் பேர் பெண்கள். சராசரியாக இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இணையதள பயன்பாட்டில் கேரளா, கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. பிகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள் கடைசி 3 இடங்களில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 90 கோடியை தாண்டும்: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.