புதுடெல்லி: ஜிஎஸ்டி வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி, ரூ.22.08 லட்சம் ஈட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் வசூல் இலக்கை ஒன்றிய பாஜ அரசு அதிகரித்து வந்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவாக கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இதற்கு முன்பு 2020-21 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.11.37 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகம்.
The post இதுவரை இல்லாத அளவாக ஜிஎஸ்டி வசூல் 5 ஆண்டில் இரட்டிப்பு appeared first on Dinakaran.