புதுடெல்லி: மத்தியபிரதேசம் சிவபுரியில் உள்ள மாதவ் தேசிய பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 58வது புலிகள் காப்பகமாகும். இந்த புலிகள் காப்பகத்தை முதல்வர் மோகன் யாதவ் இன்று திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில், “வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இந்தியா வனவிலங்குகளின் பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளை கொண்டாடும் கலாச்சாரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
The post இந்தியாவின் 58வது புலிகள் காப்பகம் திறப்பு: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.