டெல்லி: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் எப்போது வெளியேற வேண்டும் என்பது குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சார்க் விசா வெளியேறவேண்டிய நாள் ஏப்ரல் 26 இன்று நள்ளிரவு. வருகைக்கான விசா, வணிக விசா, பத்திரிகையாளர் விசா, பயண விசா, மாநாட்டு விசா, மலை ஏறுதல் விசா, மாணவர் விசா, விருந்தினர் விசா, குழு சுற்றுலா விசா, குழு யாத்திரை விசா (பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கானது)
வெளியேறவேண்டிய நாள் ஏப்ரல் 27. மருத்துவ விசா ஏப்ரல் 29 வெளியேற வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில்முக்கிய அறிவுறுத்தல்களையும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இனிமேல் எந்த புதிய விசாவும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்படாது; தூதரக மற்றும் அதிகார விசாக்கள் மட்டுமே செல்லுபடியாகும் (விசா வைத்துள்ள நபர் வெளியேற்றப்படாவிட்டால் மட்டும் செல்லுபடியாகும் . இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் எப்போது வெளியேற வேண்டும் என்பது குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்..!! appeared first on Dinakaran.