துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' விருது வழங்கப்பட்டது.
அஜித்குமார் தனது ரேஸிங் அணியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேச பந்தயத்திலேயே மூன்றாவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 992 பிரிவில் 3வது இடமும் ஒட்டுமொத்த போட்டியில் 23வது இடத்தையும் அந்த அணி பிடித்துள்ளது.