பாட்னா: பாஜவுக்கு எதிரான எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. கூட்டணியின் தலைவர் பொறுப்பை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்றுள்ளார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க அண்மையில் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தி இருக்கிறார்.
The post இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தாவை அனுமதிக்க வேண்டும்: லாலு பிரசாத் வலியுறுத்தல் appeared first on Dinakaran.