இஸ்லாமாபாத் : பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக இந்திய கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹ்லகாமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் பலியாகினர்.இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள 4 தீவிரவாத முகாம்கள், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் அழிக்கப்பட்டன.இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசியப் பாதுகாப்புக் குழு ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்தியில், “இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் கற்பனையான தீவிரவாத முகாம்கள். தாக்குதலில் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக இந்திய கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். 5 இந்திய போர் விமானங்கள், ஒரு ட்ரோன் வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானின் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிமுறை, சட்டங்களை மீறியதற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் கற்பனையான தீவிரவாத முகாம்கள் : பாகிஸ்தான் அரசு appeared first on Dinakaran.