மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 78,968 புள்ளிகளுக்குச் சென்றது. சற்று மீண்ட சென்செக்ஸ் தற்போது 900 புள்ளிகள் சரிவுடன் 79,435 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 266 புள்ளிகள் சரிந்து 24,007 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
The post இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலால் பங்குச் சந்தை குறியீட்டு எண் வீழ்ச்சி appeared first on Dinakaran.