புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.
கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினையின் போது, இரு நாடுகளிலும் ஒரே குடும்பத்தின் உறவுகளும் பிரிந்தன. இந்த எண்ணிக்கை பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் அதிகம். இரு நாடுகளிலும் பிரிந்த உறவுகள் திருமணங்கள் மூலம் மீண்டும் சேர்வது வழக்கமாக உள்ளது.