டெல்லி : இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானிற்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து நேற்று இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு தடுத்து நிறுத்தி அழித்துள்ளது. எஸ் 400 வான் தர்சன் சக்ராதாக்குதல் தடுப்பு அமைப்பு மூலம் அடுத்தடுத்து 384 ஏவுகணைகளை வானில் இடைமறித்து அழிக்க முடியும்.
100 அடி முதல் 40,000 அடி உயரத்தில் பறந்து சென்று எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்டது எஸ் 400 சுதர்சன் சக்ரா. எஸ்-400 ஏவுகணை அமைப்பின் ரேடார் மிகவும் மேம்பட்டது; சக்திவாய்ந்தது. எஸ்-400 வான் பாதுகாப்பு ரேடார் 600கிமீ வம்பிற்குள் சுமார் 300 இலக்குகளைக் கண்காணிக்க முடியும்.எஸ் 400 சுதர்சன் சக்ரா, 4 வகையான ஏவுகணைகளை கொண்டது.
இந்த எஸ் 400 வான் தடுப்பு அமைப்பு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. இதன் மூலம் தான் பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது இந்தியாவிடம் மூன்று எஸ் 400 வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு உள்ளது.மேலும் இரண்டு எஸ் 400 வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட உள்ளது.
The post இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை, ஏவுகணை தடுப்பு கட்டமைப்பான எஸ்400 சுதர்சன் சக்ரா முறியடித்தது – பாதுகாப்புத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.