சிலிகுரி: இந்தியா, வங்கதேச எல்லையில் கடத்தல் சம்பவத்தை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். மேலும் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். மேற்கு வங்கத்தில் இந்தியா-வங்கதேச எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள கல்பாரா கிராமத்திற்கு அருகே இந்திய எல்லையை சுமார் 20பேர் கொண்ட கும்பல் கடந்து உள்ளே நுழைந்ததாக தெரிகிறது.
இவர்களுடன் இந்திய எல்லைப்பகுதியில் இருந்த கும்பலும் சேர்ந்து கால்நடைகள் மற்றும் கடத்தல் பொருட்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் இந்த கும்பலை சரணடையும்படி எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த கும்பல் சரண் அடைய மறுத்துள்ளது.
மேலும் அரிவாள், தடிகள் போன்றவற்றால் வீரர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் கற்களையும் வீரர்கள் மீது எறிந்துள்ளனர். இதையடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் வங்கதேச நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கடத்தல் கும்பல் தாக்குதலில் வீரர் ஒருவரும் காயமடைந்தார்.
The post இந்தியா-வங்கதேச எல்லையில் கடத்தல் கும்பலுடன் மோதல்: ஒருவர் பலி; வீரர் காயம் appeared first on Dinakaran.