ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியை அழைத்து அவரிடம் எதிர்ப்பை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளது.
இந்த நிலையில், சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணைத் தூதர் கீதிகா வஸ்தவாவை வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்து இந்தியாவின் தாக்குதலுக்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்தியாவின் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலியாகி உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் appeared first on Dinakaran.