புதுடெல்லி,ஜன.22: இந்திய ராணுவத்திற்காக ரூ.1561 கோடி மதிப்பில் டி-72 வகையிலான 47 புதிய பீரங்கிகள் வாங்க நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பில் கனரக வாகன தொழிற்சாலையில் டி-72 வகை புதிய பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பீரங்கிகள் தற்காப்பு நடவடிக்கையின் போது படைகளை ஒருங்கிணைத்து செயல்பட உதவும். இதையடுத்து இந்த வகையிலான 47 பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்காக வாங்க நேற்று கனரக வாகனத் தொழிற்சாலையுடன் ரூ.1,561 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.
கனரக வாகனத் தொழிற்சாலை என்பது கவச வாகன நிகாம் லிமிடெட்டின் ஒரு பிரிவாகும். ஒன்றிய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் 47 டேங்க்-72 பிரிட்ஜ் லேயிங் டாங்கிகளை மொத்தமாக ரூ.1,560.52க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
The post இந்திய ராணுவத்திற்காக ரூ1,561 கோடி மதிப்பில் 47 புதிய பீரங்கிகள் appeared first on Dinakaran.