சபரிமலை: தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான அனில் குமார் கேசவ பிள்ளை, இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் இருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) வேட்பாளராக கடந்த 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாகாண சட்டமன்ற உறுப்பினராக (எம்.பி.எல்) அனில் குமார் கேசவ பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். 74 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் என்ற அந்தஸ்தை அனில் குமார் கேசவ பிள்ளை பெற்றார்.
திருவல்லா மன்னன் கராச்சிராவைச் சேர்ந்தவரும், மறைந்த கேசவ பிள்ளை மற்றும் ஈஸ்வரி பிள்ளை ஆகியோரின் மகனுமான அனில் குமார் பிள்ளை, கடந்த 1990ம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் கிழக்கு கேப் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அனில் குமார் கேசவ பிள்ளை, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மனைவி, நண்பர் நரேந்திரன் ஆகியோருடன் இன்று அதிகாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post இந்திய வம்சாவளியான தென்னாப்பிரிக்க எம்பி சபரிமலையில் தரிசனம் appeared first on Dinakaran.