புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தாஸ்னா தேவி கோயில் மட தலைவர் சுவாமி யத்தி நரசிங்கானந்த். இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவ்வப்போது பேசி வருவதால் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீன் பெற்றவர். இந்நிலையில் யத்தி நரசிங்கானந்த், சமீபத்தில் அவசர கூட்டம் நடத்தி, ‘இந்துக்கள் அனைவரும் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கிகள் வைத்திருக்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘துரதிருஷ்டவசமாக அரசியல்வாதிகளில் இந்துக்களும், இந்து தலைவர்களும் மதத்தை பாதுகாப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
தன்னை தானே பாதுகாக்க இந்துக்கள் துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் இந்துக்களுக்காக அதன் விதிமுறைகளை தளர்த்தி உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார். இந்த கடிதத்தை நரசிங்கானந்த் தனது ரத்தத்தில் எழுதியுள்ளார். இத்துடன், ஒரு லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறார். இதையும் முதல்வர் ஆதித்யநாத்துக்கு அனுப்ப உள்ளார். இந்த 2 கடிதங்கள் குறித்து நரசிங்கானந்த் ஆற்றிய உரையின் காட்சிப் பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
The post இந்துக்களுக்கு துப்பாக்கி உரிமம் தரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்: உ.பி முதல்வருக்கு சர்ச்சை துறவி கடிதம் appeared first on Dinakaran.