டெல்லி: இந்திய சாலைகளில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டு வரச் சட்டம் இயற்றவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகள் அமைப்பது மட்டுமின்றி பல புதுமைகளும் சாலைப் போக்குவரத்தில் கொண்டு வரப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய சாலைகளில் ஹாரன்களால் ஏற்படும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் திட்டம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அதாவது தற்போதுள்ள ஹாரன்களுக்கு பதிலாக இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளை ஏற்படுத்தும் ஹாரன்களை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறினார்.
இதன் மூலம் பயண அனுபவத்தை இனிமையாக்க முடியும் என நம்புவதாகக் குறிப்பிட்டார். அதாவது இந்தியச் சாலைகளில் விரைவில் ஹாரன்களே மாறப்போகிறது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அனைத்து வாகனங்களின் ஹாரன்களிலும் இந்திய இசைக்கருவிகளில் இருக்க வேண்டும்.. அப்போதுதான் அவை கேட்க இனிமையாக இருக்கும்.. புல்லாங்குழல், தபலா, வயலின், ஹார்மோனியத்தின் சத்தங்களைப் பயன்படுத்தலாம். இந்தியச் சாலைகளில் மென்மையான ஒலி சூழலின் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.
The post இனிமையான இந்திய இசை ஒலிகளை மட்டுமே வாகன HORNஆக பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.