புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 2 நாள் பயணமாக(ஜூன் 15 16) மத்திய கிழக்கு நாடான சைப்ரசுக்கு செல்கிறார். சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில், அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். இந்த பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் கனடா செல்கிறார்.
அங்குள்ள கன்னாஸ்கிஸ் நகரில் நடக்கும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது எரிசக்தி, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம், புதுமை உள்பட உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துவார். இதைத்தொடர்ந்து ஜூன் 18, 19 தேதிகளில் குரேஷியா செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலானோவிக் மற்றும் பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு உள்ளிட்டவை தொடர்பாக பேச உள்ளார்.
The post இன்று முதல் 3 நாடுகளுக்கு பயணம் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் மோடி appeared first on Dinakaran.