புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் ஆற்றிய உரையில், ‘பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் நம்முடைய இதயங்களை உலுக்கியது. 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மதத்தை கேட்டு, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக கொன்றனர். இது வெறும் தாக்குதல் மட்டுமல்ல, நமது ஒற்றுமை மற்றும் அமைதிக்கு எதிரான மோசமான முயற்சியாகும்.
கடந்த 7ம் தேதி நமது பாதுகாப்பு படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்தன. நமது பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 140 கோடி மக்களின் கூட்டு உழைப்பின் வெற்றி. இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது போரின் காலமல்ல; அதேநேரம் தீவிரவாதத்தின் காலமும் இல்லை’ என்றார்.
The post இப்போது போரின் காலமல்ல; தீவிரவாதத்தின் காலமும் இல்லை: வானொலியில் மோடி கருத்து appeared first on Dinakaran.