டெல்லி: இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. வக்ஃபு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மசோதாக்களை உச்சநீதிமன்ற தலைமையை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுதாரர்களில் ஒருவருக்காக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் வைத்துள்ளார். அதில்,
இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை
இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. வக்ஃபு திருத்தச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் அனைத்தும் எதிர்மறையாக உள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
20 கோடி இஸ்லாமியர்களின் உரிமை பறிப்பு
20 கோடி இஸ்லாமியர்களின் உரிமைகளை நாடாளுமன்றம் பறித்துள்ளதாக கபில் சிபல் வாதம் வைத்துள்ளார். 1995 வக்ஃபு சட்டத்தை முழுமையாக மாற்றும் வகையில் தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்துக்கு பிறகுதான், அதற்கு முன்பு யாரும் தலையிட முடியாது. எந்தவொரு சொத்தையும் வக்ஃபு சொத்து என்று அறிவிக்க முடியாது; அதற்கு வழிமுறைகள் உள்ளன. வக்ஃபு வாரிய உறுப்பினர்களாக இதுவரை இஸ்லாமியர்களே இருந்து வருகின்றனர். தற்போது வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தினரை நிர்வாகிகளாக நியமிப்பது நேரடி விதிமீறல் ஆகும் என்றும் தெரிவித்தார்.
The post இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் appeared first on Dinakaran.