புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி யுடியூபர் சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவதூறான வார்த்தைகளை தொடர்ந்து பேசிவிட்டு சங்கர் எத்தனை முறை மன்னிப்பு கேட்பார். அதனை ஏற்க முடியாது.
எனவே இந்த விவகாரத்தில் யூடியூபர் சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிகாரிக்கரிக்கிறது. மேலும் சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரித்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யலாம். இந்த வழக்குகள் பற்றிய கருத்துக்களை சங்கர் வெளியில் கண்டிப்பாக தெரிவிக்கக்கூடாது. மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற யூடியூபர் சங்கரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் முழுமையாக நிராகரிக்கிறது. என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் யூடியூபர் சங்கர் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடையில்லை.
The post உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு: யூடியூபர் சங்கர் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடையில்லை: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அனுமதி appeared first on Dinakaran.