திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபரம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகள் நந்தா (18). இவர் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். மெலிந்த தேகம் கொண்ட இவருக்கு உடல் பருமன் ஆகி அழகு குறைந்து விடுமோ என்ற பயம் இருந்து வந்தது. இதனால் உடல் பருமன் ஆகாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து இவர் யூடியூபில் தேடத் தொடங்கினார். இதன்படி உணவு சாப்பிடுவதை அவர் குறைத்தார். தண்ணீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் இவரது உடல் மெலியத் தொடங்கியது. பெற்றோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.
தாய் சாப்பாடு கொடுத்தால் அதை கழிப்பறையில் கொட்டிவிட்டு, வெறும் வெந்நீரை மட்டுமே தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஸ்ரீநந்தாவை தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது அனோரெக்சியா நெர்வோசா என்ற நோய் அவரை பாதித்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநந்தாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பல நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால் அவரது உணவுக் குழாயும், இரைப்பையும் சுருங்கியது தான் இவரது மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.
The post உடல் பருமனால் அழகு குறைந்து விடும் யூடியூப் பார்த்து சாப்பிடாமல் பட்டினி கிடந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு appeared first on Dinakaran.