டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணித்த விமானி உள்பட 7 பேரும் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி, 5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இது கடினமான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றதாகும். மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி appeared first on Dinakaran.