உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியின்போது லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது மேடை சரிந்து 7 பேர் உயிரிழந்தனர். பாக்பட் மாவட்டத்தில் மரத்தால் ஆன கட்டமைப்பு உடைந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 40 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவுத்தில் ஜெயின் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ‘லட்டு திருவிழா’ இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். அப்போது பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்த உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்ந்த ஜெயின் சமூகத்தினர் 30 ஆண்டுகளாக ‘லட்டு மஹோத்ஸவ’த்தை கடைப்பிடித்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த மேடை அமைக்கப்படுவதாகவும் மாவட்ட நீதிபதி அஸ்மிதாலால் தெரிவித்தார். கோயில் பூசாரிகள், பக்தர்களுக்கு லட்டு வழங்கச் சென்றபோது மூங்கில் மேடை இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
The post உத்தரபிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் லட்டு பிரசாதம் வாங்கச் சென்றபோது மேடை சரிந்து 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.