உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.45,000 பணத்துக்காக முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெண் ஒருவர் 30 மாதங்களில் 25 முறை பிரசவித்ததாகவும் 5 முறை கருவுற்றதாகவும் போலி கணக்கு எழுதி முறைகேடு நடந்தது. 35 வயதான பெண்ணின் பெயரை தவறாக பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கி ரூ.45,000 பெற்றுள்ளனர். படேகாபாத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் 4 பேர் மற்றும் ஒரு ஏஜென்ட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் பிரசவத்துக்கு ரூ.1000 முதல் ரூ.1,400 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
The post உத்தரப்பிரதேசத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.45,000 பணத்துக்காக முறைகேடு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.