டேராடூன்: உத்தராகண்டில், ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால் தம்பியின் உடலை வாடகை காரின் மேற்கூரையில் வைத்து அவரது அக்கா வீட்டுக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
உத்தராகண்டின் பித்தோரகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் பிரசாத். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வயது முதுமை காரணமாக கோவிந்த் பிரசாத் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மூத்த மகள் ஷிவானி, உத்தராகண்டின் ஹால்டுகார் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது ஊதியத்தில் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.