மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் தமது கூட்டணிக்கு வருமாறு முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் அழைப்பு விடுத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்ட சிவசேனா கட்சி 2022 ஆண்டு இரண்டாக உடைந்தது. பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் தற்போதைய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது.
தற்போது ஷிண்டே பிரிவு சிவசேனாவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், உத்தவ் தாக்கரேவும் நேற்று சந்தித்து கொண்டு நிலையில் ஆளும் கட்சி கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 2029ஆம் ஆண்டு வரை நாங்கள் உங்க பக்கம் வரமுடியாது. ஆனால் ஒருசில வழிகளில் நீங்கள் எங்கள் பக்கம் வரலாம் என்று ஃபட்னவிஸ் குறிப்பிட்டார்.
ஆனால் அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த உத்தவ் தாக்கரே, உங்களுக்கு உணவு அழைத்து கட்சிக்கு நீங்கள் துரோகம் செய்யவில்லை என்றாலும், பேராசைக்காக வேறு இடத்தை தேடுகிறீர்கள் என்றார். மேலும் சட்டப்பேரவையில் குழு புகைப்படம் எடுத்த போது தனது முன்னாள் ஆதரவாளரும், தற்போதைய துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு அருகில் அமர்வதை தவிர்த்துவிட்டார். உத்தவ் பாஜக எடுத்த பகிர்ந்த அழைப்பு மகாராஷ்டிரா அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.
The post உத்தவ் தாக்கரேவை பாஜக கூட்டணிக்கு அழைத்த ஃபட்னவிஸ்: சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தபோது அழைப்பு விடுத்தார் appeared first on Dinakaran.