ஷாம்லி: உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் முகமது அசிம்(22). இவருக்கு ஷாம்லி பகுதி பிரம்மபுரியை சேர்ந்த தாஹிரா என்ற 21 வயது இளம் பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை முகமது அசிமின் அண்ணன் நதீம் செய்தார். மார்ச் 31 அன்று திருமண மேடைக்கு சென்ற போது மணமகள் தாஹிரா பெயருக்கு பதில் அவரது 45 வயது விதவை தாய் மந்தாஷா பெயர் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது அசிம், மணமேடையில் அமர்ந்த மணப்பெண்ணின் முக்காட்டை தூக்கிப்பார்த்த போது, அவர் மணமகளின் தாய் என்பதை பார்த்து அதிர்ந்து போனார். இதுபற்றி மீரட் எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.
அதில், ‘எனக்கு நிச்சயித்த தாஹிராவுக்கு பதில் அவரது தாய் மந்தாஷா மணமேடையில் அமர்ந்து இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்ல நிர்பந்தித்தனர். நான் மறுத்ததால் பொய்யான பலாத்கார வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்தனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுபற்றி மீரட் எஸ்பி டாக்டர் விபின் தடா கூறுகையில்,’இந்த விவகாரம் தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post உபி திருமணத்தில் அதிர்ச்சி; 21 வயது மணமகளுக்கு பதில் தாயை கட்டி வைக்க முயற்சி: மணமகன் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.