டெல்லி: OpenAI இன் பிரபலமான AI சாட்பாட் ChatGPT இன்று காலை முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ChatGPT பயனர்களுக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகினர். உலகளவில் கிடைக்கும் பல AI அசிஸ்டன்ஸ்களில், ChatGPT மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் ChatGPT முடங்கியதாக பயனாளர்கள் பலர் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தனர். ChatGPT -ஐ அணுகுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக பல பயனர்கள் சமூக ஊடகங்களில் ChatGPT-ஐ இணையதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த செயலிழப்பு குறித்து OpenAI எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. ChatGPT செயலிழப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த டிசம்பரில், இதேபோன்ற செயலிழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அது சரிசெய்யப்பட்டது. இன்றும் அதேபோல் விரைவில் OpenAI நிறுவனம் ChatGPT முடங்கியது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post உலகளவில் முடங்கிய ChatGPT : ஆயிரக்கணக்கான பயனர்கள் தவிப்பு! appeared first on Dinakaran.