திருவனந்தபுரம் : உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பலான எம்எஸ்சி இரினா, கேரளத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்துள்ளது. முதல்முறையாக விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வருவதால் எம்எஸ்சி இரினா கப்பலுக்கு நீர் பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வெளியே 6 நாள்கள் காத்திருந்த எம்எஸ்சி இரினா, இன்று காலையில் துறைமுகத்துக்குள் நுழைந்தது. 4,80,000 டன் எடையுள்ள சரக்குகளை, 24346 சரக்குப் பெட்டகங்களில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பெரியது எம்எஸ்சி இரினா.
The post உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் விழிஞ்ஞம் வந்தது!! appeared first on Dinakaran.