புதுடெல்லி: இந்தியாவின் மிகச்சிறந்த ஆன்மீகத்தலைவர் ஸ்ரீநாராயண குருவும், தேசத்தந்தை மகாத்மா காந்தியும் டெல்லியில் சந்தித்து உரையாடியதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. விஞ்ஞான் பவனில் நடந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான பதிலடியில், இந்தியர்களின் ரத்தத்தை சிந்த வைக்கும் தீவிரவாதிகளுக்கு எந்தவொரு மறைவிடமும், பதுங்கு குழியும் பாதுகாப்பானது இல்லை என்பதை இந்தியா உணர்த்தி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் எதிரிகளை 22 நிமிடங்களில் சரணடைய வைத்தது.
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நாம் உலகுக்கு காட்டி உள்ளோம். வரும் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
The post உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் மூலம் எதிரிகளை 22 நிமிடங்களில் சரணடைய வைத்த இந்திய ராணுவம்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.