பெங்களூரு: கர்நாடக பாஜ தலைவர் விஜயேந்திரா மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக வெளிப்படையாக குற்றம் சுமத்தியதால் எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் 6 ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜவில் இருந்து நீக்கப்பட்ட யத்னால் பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உண்மையில் இது மக்களின் நலனிற்கான போராட்டம் என நினைத்தால் அது தவறாகும். பாஜவில் எடியூரப்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் இருக்கும் வரை அக்கட்சியில் மீண்டும் இணைய மாட்டேன். எடியூரப்பா முதல்வராக பதவி வகித்த போது தனி விமானத்தில் மொரிஷியஸ், துபாய் சென்று லஞ்ச பணத்தை முதலீடு செய்தார். உலகில் பிற நாடுகளிலும் அவரது குடும்பத்துக்கு சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை பாதுகாத்துக்கொள்ளவே இவ்வளவு வயதிலும் எடியூரப்பா வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்’ என்றார்.
The post எடியூரப்பா குடும்பத்துக்கு வெளி நாடுகளில் சொத்து: பாஜவில் இருந்து நீக்கப்பட்ட யத்னால் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.